குடிநீர் வாரிய பொறியாளரின்லஞ்ச தாண்டவம்: கோடிக்கணக்கில் சொத்து- விரைவில் கைதாகிறார்
சென்னை:
தனது வருமானத்தையும் மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார் சென்னை குடிநீர் வடிகால் வாரிய(மெட்ரோ வாட்டர்) பொறியாளரான சரவண மோகன். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனைநடத்தி கோடிக்கணக்கிலான சொத்துக்களின் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மாநகரில் பிளாட்கள், கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்புகள் பெறவும் கழிவநீர் வாய்க்கால்கள்அமைக்கவும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் வந்தாக வேண்டும். இவ்வாறு வரும் பொது மக்களிடம் அலுவகபியூனில் ஆரம்பித்து இன்ஜினியர் வரை ஒவ்வொருவரும் ஒரு ரேட் வைத்து பணம் வசூலித்து வருகின்றனர்.
குடிநீர் இணைப்பு தர, ஏரியாவுக்குத் தகுந்தபடிஇவர்களின் லஞ்சத்தின் அளவும் மாறும். அதிலும் பிளாட்களுக்குஇணைப்பு தருவதென்றால் லட்சக்கணக்கில் லஞ்சம் தந்தாக வேண்டும்.
இவ்வாறு லஞ்சத்தில் ஊறித் திளைக்கும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் குறி வைக்கஆரம்பித்துள்ளனர். பல அதிகாரிகள், பொறியாளர்களின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிதொடங்கியுள்ளது.
இதில் முதலில் மாட்டியிருப்பவர் தான் சரவண மோகன். இவரது மாதச் சம்பளம் ரூ. 14,000க்கும் குறைவு தான்.மெட்ராஸ் செலவுகளைச் சமாளித்து இவர் நியாயப்படி வாழ்ந்திருந்தால் கடன் தான் மிஞ்சியிருக்கும்.
ஆனால், இவரிடம் இருப்பது 2 கார்கள், 4 வீடுகள், 3 செல்போன்கள், 9 கம்ப்யூட்டர்கள், 7 தொலைபேசிஇணைப்புகள், 10 வங்கிக் கணக்குகள், 23 கிரெடிட் அண்ட் டெபிட் கார்டுகள், 4 டிவிகள்.
கிட்டத்தட்ட அரசியல்வாதிகளுக்கு இணையாக ஊழல் செய்துள்ளார் இந்த அதிகாரி. லஞ்சத்தில் ஊறித் திளைத்தஇவரிடம் பல கோடிக்கு சொத்துக்கள் குவிந்துள்ளன.
சென்னையில் இவரது நான்கு வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது இவர்குவித்துள்ள சொத்துக்களைப் பார்த்து போலீசாரே வியந்து போய்விட்டனர்.
1996ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை அண்ணா நகர், முகப்பேர் ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 58பிளாட்களுக்கு இவர் குடிநீர், கழிவு நீர் வாய்க்கால்கள் இணைப்புத் தந்துள்ளார். இந்தக் கால கட்டத்தில் இவர் தான்குண்டக்க மண்டக்க லஞ்சம் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படலாம்என்று தெரிகிறது.
சென்னை தவிர வேறு பல இடங்களிலும் பினாமிகள் பெயரில் சொத்துக்களில் முதலீடு செய்திருக்கலாம் என்றும்சந்தேகிக்கப்படுகிறது.


