பிரபாகரனின் பெற்றோர் இலங்கை திரும்பினர்
திருச்சி:
சுமார் 20 வருடங்களாக தமிழகத்தில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்பிரபாகரனின் பெற்றோர் இலங்கை திரும்பினர்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி அம்மையார் ஆகியோர் முசிறியில்வசித்து வந்தனர். கடந்த 1984ம் இனக் கலவரம் உச்ச கட்டத்தில் இருந்துபோது இலங்கையில்இருந்து அவர்கள் தமிழகம் வந்தனர்.
குடிபெயர்ந்து வந்த பிற தமிழர்களைப் போலவே அவர்களும் ராமேஸ்வரத்துக்கு படகு மூலம வந்து சேர்ந்தனர்.ராமேஸ்வரத்தில் சிவ வாரங்கள் இருந்த அவர்கள் பின்னர் திருச்சி கே.கே. நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்துத்தங்கினர்.
கனடாவில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதரி வினோதினி தான் பெற்றோருக்கு செலவுக்கு பணம் அனுப்பிவந்தார்.
இதற்கிடையே 71 வயதாகும் வேலுப்பிள்ளைக்கு சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டது.இதையடுத்து முசிறியைச் சேர்ந்த சித்த வைத்தியர் ஒருவர், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
சிகிச்சைக்காக வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் முசிறிக்கே இடம் மாறினார். இந்தசிகிச்சையால் வேலுப்பிள்ளையின் உடல் நிலையில் பெரும் மாறுதல் தெரிந்தது.
இந் நிலையில் மீண்டும் இலங்கைக்கே செல்ல விரும்புவதாக திருச்சி போலீஸ் கமிஷ்னர்அலுவலகத்தில் பிரபாகரனின் பெற்றோர் மனு செய்தனர். இதை ஏற்று அவர்கள் இலங்கை செல்லமத்திய, மாநில அரசுகள் அனுமதி தந்தன.
இந் நிலையில் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மையாரும் கடந்த 26ம் தேதி இலங்கைதிரும்பிவிட்ட விவரம் இப்போது தான் வெளியாகியுள்ளது. அவர்கள் திருச்சியில் இருந்து விமானம்மூலம் கொழும்பு சென்றனர்.
அவர்களுடன் பிரபாகரனின் சகோதரி வினோதினி, அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோரும்உடன் சென்றனர். தாய், தந்தையை அழைத்துச் செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்புவினோதினி தனது கணவருடன் முசிறி வந்திருந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிலமுறைநேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதே போல வைகோ வீட்டின் சில விஷேசங்களில்வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் பங்கேற்றுள்ளனர்.


