இடிக்கப்படுகிறது ஸ்ரீதேவியின் 8 மாடிக் கட்டடம்
சென்னை:
விதிகளை மீறி ஸ்ரீதேவி கட்டிய 8 அடுக்கு மாடிக் குடியிருப்பை இடிக்க மாநகராட்சிஉத்தரவிட்டுள்ளது. இந்தப் பணி இன்று மாலை நடக்கிறது.
சமீபத்தில் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் முக்கியத் தூண் இடிந்து விழுந்தது. இதனால் இந்தக்கட்டடமே எந்த நேரத்திலும் நிலை குலையலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பிஷப் வாலர்ஸ் அவினியூவில் நடிகை ஸ்ரீதேவியின் வீடுஉள்ளது. (இதை அவர் விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது). இதன் எதிர்புறத்தில் உள்ள இடத்தைவாங்கிய ஸ்ரீதேவி இரு ஆண்டுகளுக்கு முன் கமல்சந்த், பிரகாஷ் சந்த் என்ற மார்வாடிகளின் சாந்திபில்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டினார்.
தரைதளத்திற்கு மேல் மூன்று அடுக்கு மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி வாங்கிவிட்டு 8 மாடிகளைக்கட்டியது ஸ்ரீதேவி-சாந்தி பில்டர்ஸ் கூட்டணி. இதற்கு ஸ்ரீதேவி அனைத்து செல்வாக்கையும்பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
இப் பகுதியில் நிலம் அவ்வளவாக பிடிப்பு இல்லாதது என்பதால் 4 மாடிகளுக்கு மேல் கட்டடம் கட்டஅனுமதியில்லை. ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கு லஞ்சமும் பிறவகை கவனிப்புகளையும் செய்த ஸ்ரீதேவி விதிகளை மீறி 8 மாடிகளைக் கட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து கட்டடம் கட்டி முடித்த பின் பெயருக்கு கொஞ்சம் அபராதம் போட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டது பெருநகர வளர்ச்சிக் குழுமம்.
ஒவ்வொரு மாடியிலும் 2 பிரம்மாண்டமான பிளாட்கள் கட்டப்பட்டன. அவை ரூ. 50 லட்சத்துக்கும்அதிகமான விலைக்கு விற்கப்பட்டன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டத்தின் முக்கியத் தூண் பயங்கர சத்தத்துடன் விரிசல்விட்டது. அதிலிருந்த சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. அதிலிருந்த கம்பிகள் நொறுங்கி வளைந்தன.கட்டடமே ஒரு பக்கமாகச் சரிந்தது.
இந்த மாபெரும் தூண் சரிந்தபோது அருகில் இருந்த வீடுகளும் அதிர்ச்சியில் ஆடின. இதையடுத்துஅப் பகுதி மக்கள் காவல்துறையிடமும் மாநகராட்சியிடமும் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து அக் கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர். எந்த நேரமும் இக்கட்டடம் இடிந்து விழும் சூழ்நிலை இருப்பதாக அவர்கள் அறிக்கை தந்தனர்.
இதையடுத்து விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இக் கட்டடத்தின் 4 மாடிகளை உடனே இடித்துத்தள்ளுமாறு மாநகராட்சி இன்று காலை உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநகராட்சிஆணையர் விஜய்குமார் பிறப்பித்தார். இன்று பகல் 12 மணிக்குள் கட்டடத்தை இடிக்காவிட்டால்மாநகராட்சியே அதை இடிக்கும் நடவடிக்கையை எடுக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆனால், 12 மணி வரை ஸ்ரீதேவி மற்றும் சாந்தி பில்டர்ஸ் தரப்பினர் இந்தக் கட்டடதத்தைஇடிக்கவில்லை. இதையடுத்து மாநகராட்சியே இதை இடிக்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணிஇன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என மாநகராட்சி துணை ஆணையர் கந்தையா தெரிவித்தார்.
இந்த இடிப்புக்கான செலவை ஸ்ரீதேவி மற்றும் கமல்சந்த் , பிரகாஷ் சந்த் ஆகியோரிடம் இருந்துவசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக இந்தக் கட்டட பிளாட்களில் வசிப்பவர்களை உடனே வெளியேறுமாறு மாநகராட்சிஉத்தரவிட்டுள்ளது.
கட்டடம் இடிக்கப்படுவதையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும், அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.
சென்னையில் பல சொத்துக்கள் வைத்துள்ள ஸ்ரீதேவி சில படங்களுக்கும் பைனான்ஸ் செய்துவருகிறார். அதே போல சென்னையில் ஸ்ரீதேவி சில சொத்துக்களை விற்றுவிட்டார்.சைதாப்பேட்டையில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான வீட்டைத் தான் ரஜினி வாங்கினார்.
அதில் இப்போது லதா ரஜினிகாந்த் ஆஷ்ரம் கல்லூரியைக் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


