சென்னையில் 700 ப்ளூ பிலிம் விசிடிக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 700 நீலப்பட விசிடிக்கள் உள்பட 3000க்கும் மேற்பட்ட திருட்டு விசிடிக்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூக்கடை பர்மா பஜார் பகுதியில் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் வின்சென்ட் என்பவரின் கடையில் போலீஸார் திடீர் சோதனைநடத்தினர்.
அவரது கடையில் இருந்து 700 நீலப்பட விசிடிக்கள், எம்.பி.3. ஆடியோ கேசட்டுகள், புதிய கீதை, அரசு உள்ளிட்டபுதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள் உள்பட 3000 திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன. அவற்றை வைத்திருந்ததாகவின்சென்ட் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications