For Daily Alerts
Just In
மயூரணி கொலை: சோலமலைத் தேவருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை அம்பிகாஜூவல்லர்ஸ் உரிமையாளர் சோலமலைத் தேவருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம்மறுத்து விட்டது.
விசாரணையில் ஐந்து பேரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்து அதை மறைக்க முயன்றது தெரியவந்தது.
தற்போது சிறையில் உள்ள சோலமலைத் தேவர், ராக்கம்மாள், பாலபிரசன்னா ஆகியோர் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, ராக்கம்மாளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கஉத்தரவிட்டார்.
சோலமலைத் தேவர், பாலபிரசன்னா ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.


