செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன் பதவிகள் பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பி.எச்.பாண்டியன் ஆகியோரின் கட்சிப் பதவிகளை முதல்வர்ஜெயலலிதா திடீரென பறித்துள்ளார்.
ஆனாலும், ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரச்சார திட்டங்களை மிக அருமையாகப் போட்டுத் தந்தார். இதனால்இடைத் தேர்தல்களிலும் செங்கோட்டையனின் உதவியை ஜெயலலிதா நாடினார்.
இந் நிலையில் அவருக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி தரப்பட்டது. ஆனாலும் தலைமை நிலையத்தில் இவர்சசிகலாவின் ஆட்களால் ஜாதிரீதியாக ஒதுக்கப்பட்டார். அங்கு இவருக்கு மரியாதை கிடைக்கவில்லை.இதையடுத்து சென்னையில் இருப்பதையே தவிர்த்துவிட்டு தனது சொந்த ஊரில் உள்ள தோட்டத்தை கவனிக்கஆரம்பித்தார்.
இந் நிலையில் சமீபத்தில் இவருக்கு ஜெயலலிதாவிடம் டோஸ் கிடைத்தது. தலைமை நிலையச் செயலாளர் என்றார்சென்னையில் இருக்க வேண்டும் என்று இவருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஊரிலிருந்து கிளம்பி வந்தார்.
ஆனால், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமையகத்தில் செங்கோட்டையனுக்கு தனி ரூம் எல்லாம் தரவேண்டாம் என்று ஜெயலலிதா கூறிவிட்டதால் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அமரும் அறையில் ஒரு டேபிள்சேரைப் போட்டு செங்கோட்டையனை உட்கார வைத்தனர்.
இதனால் யாரிடமும் பேசாமல் வெறித்த பார்வையுடன் தலைமைக் கழகத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்செங்கோட்டையன். இந் நிலையில் அவரது பதவியை இன்று ஜெயலலிதா பறித்துள்ளார்.
பி.எச்.பி.:
அதேபோல, லோக்சபா அதிமுக தலைவராக உள்ள பி.எச்.பாண்டியனின் சட்ட ஆலோசகர் பதவியையும்ஜெயலலிதா பறித்துள்ளார். டான்சி வழக்கு விவகாரத்தில் இவர் டெல்லியில் சரியான முறையில் காய் நகர்த்தத்தவறிவிட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைமை நிலையச் செயலாளராக அமைச்சர் சட்ட அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்ட ஆலோசகராக ஜெயலலிதாவின் முக்கிய வழக்குகளில் அவர் சார்பில் ஆஜராகி வரும் எம்.பியான ஜோதிநியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரணியிலும் மாற்றம்:
அதேபோல, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்த எம்.எல்.ஏவான மேலூர் சாமியும்நீக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்புக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications