தேர்வெழுத வந்து போலீசாரிடம் மண்டை உடைபட்ட வாலிபர்கள்
தஞ்சாவூர்:
தஞ்சையில் போலீஸ் எழுத்து தேர்வுக்கான நேரம் குறித்து குழப்படி நடந்தது. இதனால் பாதிக்கப்பட்டமாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் மீது போலீசார் பயங்கரமாக தடியடி நடத்திமண்டைகளை உடைத்தனர்.
2-வது கட்டமாக எழுத்து தேர்வு இன்று தஞ்சையில் உள்ள ஆயுத படை மைதானத்தில் காலை 7மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உடல் திறன் தேர்வில் வென்ற சுமார் 5,000 வாலிபர்கள் தஞ்சை ஆயுத படை மைதானத்துக்கு காலை6 மணிக்கே வந்து விட்டனர். எழுத்து தேர்வு காலை 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்தகேட் கீப்பர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து இவர்களில் சுமார் 1,000 பேர் வெளியே சென்றனர். மீண்டும் 8.30 மணிக்குமைதானத்துக்கு வந்தனர்.
ஆனால், அதிகாரிகள் காலை 7 மணிக்கே தேர்வு தொடங்கி விட்டதாகவும் உங்களை இனிமேல்தேர்வெழுத அனுமதிக்க முடியாது என்றும் கூறினர். இதனால் அந்த இளைஞர்கள்அதிர்ச்சியடைந்தனர். கேட் கீப்பர்கள் தான் தங்களை திருப்பி அனுப்பினார்கள் என்று சொல்லிப்பார்த்தும், கெஞ்சி, கதறிப் பார்த்தும் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து இந்த மாணவர்கள் கலக்கத்துடன் கலெக்டர் அலுவலகம் சென்றனர்.
கலெக்டரை சந்தித்து தங்களுக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி மனு கொடுக்க முயன்றனர். அதற்கும்அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சாலை மறியல் செய்தவர்களுடன் சமரசம்பேசப்பட்டது. ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர்.
எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று அந்த வாலிபர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து அவர்கள்மீது போலீஸார் பயங்கரமாக தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது. இதையடுத்து அவர்கள் சிதறி ஓடினர். பலர் தாங்கள் ஏமாந்துபோய் தேர்வை கோட்டைவிட்டதை நினைத்து கதறி அழுதனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications