போப் மீது விமர்சனம்: எல்லை மீறியுள்ளார் ஜெ
சென்னை:
போப் ஆண்டவர் குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக போப் கருத்து கூறவில்லை. உலகில் உள்ள எந்த சட்டம்குறித்தும், யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
அந்த உரிமைக்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை போப் கடக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.ஆனால், ஜெயலலிதா தான் தனது எல்லையை மீறி போப்பாண்டவரை விமர்சித்துள்ளார்.
அழகிரியின் வீடு, கடைகளில் போலீஸார் சோதனை நடத்தவில்லை, அரசியல் நடத்தியிருக்கிறார்கள்.
சண்டியர் படம் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது அவசியமற்ற சண்டை என்றார் கருணாநிதி.
- அதிமுக விரட்டுவதே முதல் வேலை..
இதையடுத்து காஞ்சிபுரத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே போன்ற நல்ல திட்டங்கள் ஏதும் இப்போதுஇல்லை.
ஏழை, எளிய மக்களுக்கு ஏற்ற அரசாக இது இல்லை. அதிமுக ஆட்சியின் முக்கிய வேலையே, திமுகவினர் மீதுபொய் வழக்குப் போடுவது, அவர்களைக் கைது செய்வது, வீடு, வர்த்தக நிறுவனங்களில் ரெய்டு நடத்துவதுதான்.
இந்த ஆட்சியில் மருத்துவக் கல்வி மிகவும் காஸ்ட்லியாகி விட்டது. சாதாரணப்பட்ட யாரும் மருத்துவம் படிக்கமுடியாத நிலையை ஜெயலலிதா ஏற்படுத்திவிட்டார். அதிமுக அரசின் தில்லுமுல்லுகள், மிரட்டல்கள், பொய்வழக்குகளை சமாளித்து, சந்தித்து, அடுத்து வரும் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கும்.
அதிமுகஆட்சியை விரட்டுவதே நம் முன் இப்போதுள்ள மிக முக்கியப் பணி என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications