போதையில் கோவில் மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி
சென்னை:
குடித்து விட்டு, கோவில் மாடியில் படுத்திருந்தவர் தவறி கீழே விழுந்து மூளை சிதறி இறந்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டுவருகிறது. சிதம்பரத்திலிருந்து வந்துள்ள கட்டுமான ஊழியர்கள் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சந்திரசேகர்.
கோவிலேயே தங்கியிருந்து இவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில், சந்திரசேகருக்குப் பிறந்த நாள்வந்தது. இதையடுத்து பிறந்தநாளை கொண்டாட நன்றாக குடித்தார் .போதை தலைக்கேற, கட்டப்பட்டு வரும்கோவிலின் மாடியில் ஏறித் தூங்கினார்.
காலையில் எழுந்தார். ஆனால் போதை தெளியாத காரணத்தால் தள்ளாடினார். அப்போது மாடியிலிருந்து அவர்கீழே விழுந்தார். தரையில் படு வேகத்தில் வந்து மோதிய அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.
இவருக்கு மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.


