திமுக தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு உத்தரவு
கோயம்பத்தூர்:
கோவையில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என்று கோவை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்தது. இதில், கோவை நகர 38-வது வார்டுஉறுப்பினர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி திமுகவைச் சேர்ந்த ஷாஜித் என்பவர் கட்சித் தலைமைக்கு கோரிக்கைவிடுத்து பேக்ஸ் அனுப்பினார்.
ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படாமல், அறிவித்த தினமான 18ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. முருகன் என்பவர்வார்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஷாஜித், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சி விதிமுறைக்கு மாறாக இந்தத் தேர்தல் நடந்துள்ளது.எனவே இது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மனுவை விசாரித் நீதிபதி சரவணப் பெருமாள், வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்உள்ளிட்ட 4 பேர் ஜூலை மாதம் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், சம்மன் உடனடியாக அனுப்பப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இவர் தவிர ராமநாதபுரத்தில் நடந்த திமுக தேர்தலை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த மான்கொம்பு நாகராஜன் என்பவரும் கருணாநிதி மீதுவழக்குப் போட்டுள்ளார்.
கருணாநிதி- செஞ்சியார் சந்திப்பு:
திமுக தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழைகொடுத்தார்.
உதவியாளர் லஞ்சம் வாங்கியதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்,கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் உடனிருந்தார்.


