For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் கல்வி கட்டணம் மிக அதிகம்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவில் கல்விக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என ஜனாதிபதிஅப்துல் கலாம் கூறினார்.

Abdul kalam in Anna University

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்த கலாம், பின்னர் தனதுஅக்னி சிறகுகள் நூலின் 1 லட்சமாவது பிரதியைப் பெற்றுக் கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தந்தபதில்:

இந்தியாவில் கல்விக் கட்டணம் மிக மிக அதிகம். படிப்புக்கு இவ்வளவு பணத்தை செலவிட எல்லோராலும்முடியாது. இதைக் குறைத்தால் தான் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாதகருத்து.

அதே நேரத்தில் கல்வியை இலவசமாகத் தருவதும் சாத்தியமில்லை. இருப்பவர்கள் பணம் கொடுத்துப் படிக்கலாம்.இல்லாதவர்களுக்கு கட்டணம் குறைவாகவே இருக்க வேண்டும்.

8ம் வகுப்பு வரை கல்வியைக் கட்டாயமாக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் மிகமகிழ்ச்சியுடன் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன்.

படித்தவர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவதால் இந்தியாவில் "brain drain" ஏற்படுகிறது என்பதெல்லாம்கற்பனையான விஷயம். ஆண்டுதோறும் 3,00,000 பேர் பொறியியல் கல்லூரிகளில் இருந்து இன்ஜினியர்களாகவெளியே வருகிறார்கள். இதில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே வெளிநாடுகளுக்குப் போகின்றனர்.இதனால் நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

இன்டர்நெட்டில் தமிழ் சர்ச் என்ஜினை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக நான் திருக்குறள், திருக்குரான், Light from the Many Lamps , Empowerment ofMind and To begin where I am ஆகியவற்றை நான் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கலாம்.

புற்றுநோய் மையம்:

முன்னதாக சென்னை வட பழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் பேட்டர்சன் சென்டர் என்ற புற்று நோய்சிகிச்சைப் பிரிவைத் துவக்கி வைத்த கலாம் பேசுகையில்,

புற்று நோயாளிகள் என்றாலே ஒதுக்கி வைத்துப் பார்க்கும் மன நிலையை முதலில் நாம் விட்டொழிக்க வேண்டும்.சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் புற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

எனக்குத் தெரிந்த ஒரு 6 வயது சிறுமி தாலசீமியா என்ற வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.அவளுக்கு எலும்பு மஞ்சையை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தான் தீர்வு கிடைக்கும். ஆனால், இந்த அறுவைசிகிச்சை செய்ய போதிய மருத்துவமனைகள் இல்லை.

இது போன்ற சிறப்பு மருத்துவப் பிரிவுகளை நிறைய மருத்துவமனைகள் தொடங்க வேண்டும். முதலில் தாலசீமியாகுறித்து மத்திய அரசுக்கு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூருக்கு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிச் சென்றார் கலாம்.அங்குள்ள சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.

இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் கலாம், ஏனாத்தூரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதிபல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மேற்படிப்புகளைத் தொடங்கி வைக்கிறார்.

காஞ்சிபுரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு மாலை 6.25 மணியளவில் சென்னை திரும்பும் கலாம் இரவு7.10 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X