தூத்துக்குடியில் ரூ. 4,000 கோடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம்
சென்னை:
தூத்துக்குடியில் ரூ. 4,000 கோடி செலவில் 1,000 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் புதிய அனல் மின்திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தூத்துக்குடி துறைமுகத்திற்குள்ளேயே இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தஉள்ளன. இதற்காக தூத்துக்குடியில் பிரம்மாண்டமான மின் நிலையம் அமைக்ப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னையில் கையெழுத்தானது. முதல்வர் ஜெயலலிதா, மத்திய சுரங்கத்துறைஅமைச்சர் கயாண்டா முன்னிலையில் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தலைவர் ஜெயராமனும், தமிழ்நாடுமின்வாரியத் தலைவர் ஞானதேசிகனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மொத்த திட்டச் செலவான ரூ. 4,000 கோடியில் 89 சதவீதத்தை நெய்வேலி சுரங்கமும் 11 சதவீதத்தை தமிழக மின்வாரியமும் ஏற்கும்.
2007-08ம் ஆண்டில் இந்த திட்டம் செயல்பட ஆரம்பிக்கும். இதில் உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரமும்தமிழ்நாட்டுக்கே பயன்படுத்தப்படும். எனவே தென் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் என்றுதெரிகிறது. மேலும் தூத்துக்குடியைச் சுற்றி தொழிற்சாலைகள் உருவாகவும் இந்த மின் திட்டம் உதவியாகஇருக்கும்.
இப்போது நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பகுதி தான் தமிழகத்துக்குக் கிடைத்து வருகிறது.


