For Quick Alerts
For Daily Alerts
Just In
கமல் கொடுத்த விளம்பரம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டு வந்த கமல், அவருக்கு நன்றி தெரிவித்து தமிழகத்தின் அனைத்துப்பத்திரிக்கைகளிலும் முதல் பக்கத்தில் கால் பக்க விளம்பரம் கொடுத்து ஜெயலலிதாவை அதிமுகவினர்பாணியிலேயே அசத்தியுள்ளார்.
சண்டியர் பட ஸ்டில் பேக்கிரவுண்டில், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் போட்டு கமல் தந்துள்ள விளம்பரவிவரம்:
நன்றி..
காலத்தில் கனிவுடன் என் நிலை உணர்ந்து
நியாயமான அறிவுரை வழங்கிய
மாண்புமிகு தமிழக முதல்வர்
டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
நிறுவனத்தின் கலைஞர்கள், தொழில்நுப்ட வல்லுனர்கள்,
தொழிலாளர்கள் சார்பில் மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கமல்ஹாசன்
இவ்வாறு தனது நிதானமான நடவடிக்கையால் பெரிதாகவிருந்த ஒரு சர்ச்சையை ஒன்றுமில்லாமல் செய்துள்ளார் கமல்என்கிறார்கள் அவரது ரசிகர் மன்றத்தினர்.


