சண்டியருக்கு புதிய பெயர் விருமாண்டி?
சென்னை:
சண்டியர் படப் பிரச்சினை ஓய்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. முதல்வர் ஜெயலலிதா சந்தித்து படத்தின் பெயரைமாற்றுவதாக அறிவிக்க, இரவோடு இரவாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கமலின்அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
படத்தில் கமலஹாசனின் கேரக்டருக்கு வைக்கப்பட்டுள்ள பெயரே படப் பெயராகவும் வைக்கப்படும் என்றுஅவருக்கு நெருக்கமான வட்டாரஙகள் தெரிவிக்கின்றன. அதில் கமலின் பெயர் விருமாண்டித் தேவர். ஆக,படத்தின் பெயர் விருமாண்டி ஆகலாம்.
படத்தின் கதையிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்குமாம். திட்டமிட்டபடி தேனி மாவட்டத்திலேயே தனதுபடப் பிடிப்பை நடத்தவலும் கமல் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இது தவிர சென்னையில் செட் போட்டும்சில காட்சிகள் எடுக்கப்படுமாம்.
நேற்று முதல்வரைச் சந்தித்த கமல், அவரிடம் தனது படத்தின் அவ்ட்-லைனை விளக்கியதாகவும் தெரிகிறது. இதுதலித்-தேவர் மோதல் தொடர்பான கதையே அல்ல, எல்லோரும் சேர்ந்து புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டார்கள்என்பதையும கமல் விளக்கினார்.
இதையடுத்து பிரச்சினை படத்தின் தலைப்பில்தான் என்று ஜெயலலிதா சுட்டிக் காட்ட, அதை மாத்திட்டா போச்சுஎன்று உடனடியாக முதல்வரிடம் கமல் பதில் கூறினாராம். இதில் ஜெயலலிதாவும் திருப்தி அடைய, தலைப்பைமாற்றினால் பிரச்சினை இல்லை. நீங்க தைரியமா படத்தை எடுங்க என்று வாழ்த்து கூறி கமலுக்கு தைரியம் தந்தார்என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பெரும் நிம்மதியுடன் வெளியே வந்தார் கமல்.


