வேலூரில் அரவாணிகள் சங்கம் தொடக்கம்
வேலூர்:
வேலூரில் அரவாணிகள் (அலிகள்) இணைந்து புதிய சங்கத்தை ஏற்படுத்தி தங்களது அடிப்படை உரிமைகளுக்காகபோராட முடிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகள் இணைந்து அரவாணிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் இந்தச்சங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
சமுகத்தில் தங்களை ஏளனப் பொருளாக பார்ப்பதை தடுக்கும் வகையிலும், தங்களது அடிப்படை உரிமைகளைகோரிப் பெறவும் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
சாதாரணப் பெண்களை யாராவது கேலி செய்தால் உடனே, ஈவ் டீசிங் என்று கூறி போலீஸார் நடவடிக்கைஎடுக்கிறார்கள். ஆனால் எங்களை யாராவது கேலி செய்தால் அதுபோல நடவடிக்கை எடுப்பதில்லை.
இது தவிர விண்ணப்பப் படிவங்களில் ஆணா, பெண்ணா என்று தான் கேட்கிறார்கள். நாங்கள் எதைச் சொல்வது?.ரயில் டிக்கெட்டில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் எங்களுக்கு இந்தப் பிரச்சனை வருகிறது.
ஈவ்-டீசிங் தடுப்பு மாதிரி, இனிமேல் எங்களுக்கும் சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று இவர்கள்கோருகிறார்கள்.
இதுதவிர வாக்குரிமை, குடும்ப அட்டைகள் ஆகியவையும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள்கோரிக்கை வைத்துள்ளனர்.
இந் நிலையில் அரவாணிகளின் கோரிக்கையை ஏற்று செண்பகராயன்நல்லூர் என்ற இடத்தில் அரவாணிகளுக்குதனி குடியிருப்பு கட்ட வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இவர்களுக்கு வங்கிகளில்கடனுதவி பெற்றுத் தரவும் மாவட்ட ஆட்சியர் முயற்சி எடுத்துள்ளார்.


