காங்கிரஸ் மீண்டும் உடையுமா? ஜி.கே.வாசன் திடீர் போர்க்கொடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சி மீண்டும் உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கமல்நாத் தலைமையில் இன்று நடக்கும்ஆலோசனைக் கூட்டத்தை ஜி.கே.வாசனும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

காமராஜர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை மெரீனா கடற்கரையில் ஜூலை 19ம் தேதி நடக்கவுள்ளது. இதில்சோனியாகாந்தி பங்கேற்கவுள்ளார். இதுதொடர்பான பணிகளைக் கவனிக்க 31 பேர் கொண்ட குழுவை சோனியாஅமைத்துள்ளார்.

இந்தக் குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கமல்நாத், சத்யஜித் கெய்க்வாட் ஆகியோர் சென்னை வந்தனர். இதில் கமல்நாத் தான் தமிழககாங்கிரஸ் கட்சிக்கான மத்தியப் பார்வையாளராக உள்ளார்,

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமா சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை கமல்நாத், கெய்க்வாட் ஆகியோர்தலைமையில் கூட்டம் தொடங்கியது. ஆனால், இக் கூட்டத்தை ஜி.கே.வாசன், தனது ஆதரவாளர்களுடன்புறக்கணித்தார்.

மொத்தம் உள்ள 3 1 உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இவர்களில் வாசனின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும், பீட்டர்அல்போன்சும் அடங்குவர். மற்ற 11 பேரும் இளங்கோவனின் ஆதரவாளர்கள்.

கூட்டத்தைப் புறக்கணித்த எஞ்சிய 18 பேரும் ஜி.கே. வாசனின் வீட்டில் தனியாக ஆலோசனைக் கூட்டம்நடத்தினர். இதில் முக்கியமானவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தனுஷ்கோடி ஆதித்தன், ஞான தேசிகன்ஆகியோர்.

முன்னதாக ஹோட்டலில் தங்கியிருந்த கமல்நாத் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவெளியே வந்தபோது, வாசன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கெரோசெய்தனர். இதனால் ஹோட்டல் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்நாத் தலைமையிலான கூட்டத்தை வாசன் பகிரங்கமாக புறக்கணித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸுக்கு இரட்டைத் தலைமை கூடாது என்று வாசன் மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை சோ.பாவும், இளங்கோவனும் தலைவர்களாக நீடிப்பார்கள் என்றுஅறிவிக்கப்பட்டதால் வாசன் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இளங்கோவனையும் சோ.பாலகிருஷ்ணனையும் டெல்லிக்கு அழைத்த சோனியா இளங்கோவனைமட்டுமே சந்தித்தார். பாலகிருஷ்ணனைச் சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார். இதனால் தானேஅவமானப்படுத்தப்பட்டதாக வாசன் நினைக்கிறார்.

இதையடுத்தே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்குமாறும், தேர்தலின்போது அதிக இடங்கள்கொடுக்கப்படும் என்றும் வாசனுக்கு அதிமுக தரப்பில் ரகசிய அழைப்பு வந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

அதை உறுதி செய்யும் விதமாக, கட்சி மேலிடத்திற்கு எதிராக வாசன் செயல்பட ஆரம்பித்துள்ளதாக காங்கிரஸில்ஒரு தரப்பினர் பேசுகிறார்கள்.

வாசனின் தற்போதைய நடவடிக்கை காங்கிரஸ் கட்சியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வாசன் மீதுநடவடிக்கை எடுக்குமாறு கமல்நாத் மூலம், கட்சி மேலிடத்தை வற்புறுத்த இளங்கோவன் மற்றும் பிற காங்கிரஸ்தலைவர்கள் முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+