For Daily Alerts
Just In
கின்னஸ் சாதனைக்கு ஜெ. முயற்சி: ப.சிதம்பரம் கிண்டல்
சென்னை:
ஒரு லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததன் மூலம் முதல்வர் ஜெயலலிதா கின்னஸ் சாதனை நிகழ்த்தமுயற்சிப்பது போலவே தெரிகிறது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அரசுடிஸ்மிஸ் செய்துள்ளது. இதனால் ஒரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. கின்னஸ் சாதனைக்குத்தான் பயன்படும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வீடு வீடாக புகுந்து நள்ளிரவில் கைது செய்துள்ளது மிகவும் கொடூரமானது.இந்த கைது நடவடிக்கை சட்டப்பூர்வமாக செல்லாது.
காவல்துறையினர் இதுபோன்ற சமயத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. அவர்களும் அரசுஊழியர்கள் தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


