வண்டுகளை உயிருடன் விழுங்கிய வாலிபர் பரிதாப சாவு
சென்னை:
நண்பர்களுடன் போட்டி போட்டு வண்டுகளைப் பிடித்துத் தின்ற வாலிபர் பரிதாபமாக உயிழந்தார்.
வண்டுகளை உயிருடன் பிடித்துத் தின்றால் என்ன பெட் என்று கேட்டார் சென்னை மணலி புதுநகர் பகுதியைச்சேர்ந்த விஸ்வநாதன். அவரது நண்பர்கள் தடுத்துள்ளார்கள். உயிருடன் உள்ள வண்டுகளை சாப்பிட்டால்உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால், கேட்கவில்லை விஸ்வநாதன். இதையடுத்து, சரி வண்டுகளை சாப்பிடு பார்க்கலாம் நண்பர்களும் சவால்விட்டுள்ளனர். உசுப்பி விடப்பட்ட விஸ்வநாதன், 5 வண்டுகளைப் பிடித்து சாப்பிட்டுள்ளார்.
அவ்வளவுதான், வண்டுகள் தொண்டையில் போய் கடித்தில் வலியால் துடித்துள்ளார். பதறிப்போன நண்பர்கள்உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் விஸ்வநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது மூச்சுக் குழலைவண்டுகள் சேதப்படுததியதால் அவர் இறந்ததாகத் தெரிகிறது.


