விஜய் முதல்வரானதும்.. த்ரிஷாவிற்கு உதயநிதி கொடுத்த மெகா ஆஃபர்.. இப்போது ‘ஹாட் டாபிக்கே' இதுதான்
சென்னை: தமிழக அரசியல் இதுவரை இல்லாத ஒரு நிலையை சந்தித்துள்ளது. திரைத்துறையில் இருந்து வந்த நடிகர் விஜய் முதல்வராகவும், உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளனர். விஜய்யின் நெருங்கிய தோழி த்ரிஷா அவரது பதவியேற்பில் பங்கேற்று உணர்ச்சிவசப்பட்டார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து த்ரிஷாவிற்கு பெரிய ஆஃபர் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழக அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாது என்பதற்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலும் சான்றாக மாறி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த எம்ஜிஆர், ஹீரோயினாக ஜொலித்த ஜெயலலிதா ஆகியோரின் வரிசையில் விஜய் தமிழக முதல்வராகி உள்ளார்.

அதுவும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய 3 ஆண்டுகளுக்கும் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார்.
விஜய் பதவியேற்பில் த்ரிஷா
இந்த பதவியேற்பு விழாவில் விஜய்யின் தந்தையான இயக்குநர் சந்திரசேகர், தாய் ஷோபா பங்கேற்றனர். விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். இதனால் அவர் பங்கேற்றவில்லை. அதேபோல் விஜய்யின் மகன் மற்றும் மகள் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் த்ரிஷா அதிக கவனம் பெற்றார். விஜய்யின் நெருங்கிய தோழியாக வலம் வரும் த்ரிஷா பட்டு சேலை அணிந்து விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில் பங்கேற்றார்.
உணர்ச்சிவசப்பட்ட த்ரிஷா
விஜய்யின் தாய் ஷோபாவை கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் த்ரிஷா அங்கிருந்தவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த வீடியோக்கள் இணையதளங்களில் டிரெண்ட்டாகின.
அதேபோல் 'ஜோசப் விஜய் எனும் நான்' என்று கூறி விஜய் மேடையில் முதல்வராக பதவியேற்றபோது த்ரிஷா உணர்ச்சிவசப்பட்டார். இந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
உதயநிதி கொடுத்த ஆஃபர்
இப்படி விஜய்யின் நெருக்கமான தோழியாக வலம் வரும் த்ரிஷாவிற்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து பெரிய ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் தரப்பிலிருந்து த்ரிஷாவிற்கு ரூ.12 கோடி சம்பளத்தில் புதிய திரைப்பட வாய்ப்பு வழங்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 'ரெட் ஜெயன்ட்' சார்பில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த நிறுவன பணிகளை உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி மேற்கொண்டு வருகிறார்.
விவாதமான விவகாரம்
இந்த செய்தி தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது. விஜய்யும், உதயநிதி ஸ்டாலினும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக வலம் வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்யின் தோழியான த்ரிஷாவிற்கு, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதோடு, இந்த ஆஃபர் பற்றிய செய்திகள் விஜய் நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்ததில் இருந்து பரவ தொடங்கி உள்ளது. இதனால் இது அரசியல் ரீதியாகக் கவனிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வாய்ப்பு தொடர்பாக த்ரிஷா மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா
தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா - நடிகை த்ரிஷா நடிப்பில் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தி ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications