மதுரையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை
மதுரை:
மதுரையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயின்ஷாப்பில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை காளவாசல் அருகே பாண்டியன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் (வயது27).
இவரும் நண்பர் சந்திரசேகர் என்பவம் ஒயின்ஷாப்புக்கு சென்றனர்.
அங்கு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு ஆட்டோவில் வந்த 4 பேர்கொண்ட கும்பல் ராமச்சந்திரனை சரமாறியாகத் தாக்கியது. உடலெங்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கழுத்திலும்ஆழமான வெட்டு விழுந்தது.
இதையடுத்து அக் கும்பல் ஆட்டோவிலேயே தப்பியோடிவிட்டது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராமச்சந்திரன் சிறிது நேரத்தில் இறந்தார்.
காளவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமச்சந்திரன் ரெளடித்தனத்தில் ஈடுபட்டுவந்ததாகவும், இதனால் முன் விரோதம் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.


