For Daily Alerts
Just In
தா.கி. கொலை வழக்கு: திமுக கவுன்சிலர் நீதிமன்றத்தில் சரண்
திருச்சி:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த மதுரை திமுககவுன்சிலர் கார்த்திகேயன் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக பல திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் மதுரைஅவனியாபுரம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கார்த்திக் என்ற கார்த்திகேயனை (34) என்பவரையும் தேடி வந்தனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். இந் நிலையில் கார்த்திகேயன் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றமாஜிஸ்திரேட் முன் சரணடைந்துளளார்.
இதையடுத்து அவரை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுளளார்.


