ஜெ.வை ஈர்க்க ஊனமுற்ற இளைஞரின் நூதனப் போராட்டம்
சென்னை:
அரசு வேலை கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக, மதுரையைச் சேர்ந்த உடல் ஊனமுற்றஇளைஞர், தலைமைச் செயலகத்தை சுத்தப்படுத்தும் நூதனப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் கை, கால் ஊனற்றவர். வறுமையில் வாடும் குடும்பத்தைச்சேர்ந்தவர். இருப்பினும் தனது விடா முயற்சியால் வெல்டிங் செய்வது, ஸ்கிரின் பின்டிங் செய்வது ஆகியவற்றைக்கற்றுள்ளார்.
அத்தோடு ஊனமுற்றோருக்கான விளையாட்டிலும் பங்கேற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறுபதக்கங்கள், பரிசுகள், கோப்பைகளை வென்றுள்ளார்.
நீண்ட காலமாக அரசு வேலை கோரி முதல்வரை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்த கோபி கண்ணன் தற்போதுதற்காலிக ஊழியர்களை தேர்வு செய்வதை அறிந்து சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முகாமிட்டஇவர் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.
இதையடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நூதனமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியை இவர் மேற்கொண்டுள்ளார். கோப்பைகள்,பதக்கங்களுடன், விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் தலைமைச் செயலகத்தை இவர் சிரமத்துடன் சுத்தம்செய்வது அங்குள்ளவர்களை ஈர்த்துள்ளது.
தனது செயல் முதல்வரின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும், ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்உள்ளார் கோபி கண்ணன்.
கடை நிலை வேலை கொடுத்தால் கூட செய்யத் தயாராக இருப்பதாக ஏக்கத்துடன் கூறுகிறார் கோபி கண்ணன்.


