படப்பிடிப்பில் மணிரத்தினத்திற்கு மாரடைப்பு: விவேக் ஓபராய் கால் முறிந்தது
கொல்கத்தா:
இயக்குனர் மணிரத்னம், படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மணிரத்னம் தற்போது இந்திப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் உள்ளஹூக்ளி நதி மேம்பாலத்தில் நடந்தது. நேற்று மாலை 5.30 மணி வாக்கில் பாலத்திலிருந்து ஹீரோ விவேக் ஓபராய்மோட்டார் சைக்கிளுடன் விழுவது போன்ற காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார் மணிரத்னம்.
அப்போது எதிர்பாராதவிதமாக விவேக் ஓபராய் பைக்கிலிருந்து பாலத்தில் மோதி, விழுந்தார். இதில் அவரது கால்முறிந்து விட்டது.
இந்தக் காட்சியை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மணிரத்னம், விவேக் ஓபராய் பாலத்திலிருந்துஆற்றுக்குள் விழுந்து விடப் போகிறார் என்று பயந்து, மிரட்சியில் அய்யோ என்று கத்தியுள்ளார். இதையடுத்துமணிரத்னம் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து விவேக் ஓபராய் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் உடனடியாக பி.எம். மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்பட்டனர்.
மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இப்போது அவரது நிலைமை தேறி வருவதாகவும் டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பும் மணிரத்னத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்துஅப்பல்லோவில் சிகிச்சை பெற்றார். தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
கால் முறிவு ஏற்பட்ட விவேக் ஓபராய்க்கு இன்று அறுவைச் சிகிச்சை நடக்கவுள்ளது. இவர் தான் ஐஸ்வர்யா ராயின்புதிய காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானை வெட்டிவிட்டுவிட்டு இப்போது ஐஸ்வர்யா இவருடன்தான் சுற்றி வருகிறார்.


