For Daily Alerts
Just In
சாதிச் சான்றிதழ் கோரி ராமநாதபுரத்தில் பழங்குடியினர் ஊர்வலம்
ராமநாதபுரம்:
சாதிச் சான்றிதழ், அரசு சலுகைகளை வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள்ஊர்வலம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நூற்றாண்டுகளாகவசித்து வருகிறார்கள். தங்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும், சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றுஇவர்கள் கோரி வருகிறார்கள்.
ஆனால், இவர்களுக்கு சாதிச் சான்றிதழ்களைத் தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
இதையடுத்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அவர்கள் பேரணி நடத்தினர். ரயில்வேசந்திப்பிலிருந்து கிளம்பிய பேரணி, அரண்மனை வாசலில் முடிவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டமும் நடந்தது.


