சென்னையில் ஓட்டலுக்குள் புகுந்த அரசு பஸ் மோதி 3 பேர் பலி
சென்னை:
சென்னையில், அதி வேகமாக சென்று கொண்டிருந்த லாரியை ஓவர்டேக் செய்து முந்த முயன்ற அரசு பஸ்,கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் 3 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
சென்னை, கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையம் அருகே இந்த பயங்கர சம்பவம் இன்று காலை நடந்தது.செங்குன்றத்திலிருந்து கிண்டி நோக்கி சி-70 நகர பேருந்து வந்து கொண்டிருந்தது.
வெளியூர்ப் பேருந்து நிலையம் அருகே வேகமாக வந்த பஸ், எதிரே சென்று கொண்டிருந்த லாரியை முந்தமுயன்றது. ஏற்கனவே லாரி அதி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதை விட பயங்கர வேகமாகச் சென்றுலாரியை முந்த பஸ் டிரைவர் முயன்றார்.
அப்போது தனது கட்டுப்பாட்டை டிரைவர் இழந்தார்.
படு வேகமாக ஓடிய பஸ் சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதில் ஹோட்டல் உடைந்துநொறுங்கியது. ஹோட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிபலியாயினர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார். மேலும் 2பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தால் கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலையில் பஸ், லாரிகள் போன்றவை அதி வேகமாக செல்வதால் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள்போன்றவை மிகவும் பீதியுடன்தான் செல்ல வேண்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications