கேரள அரசு பஸ் ஜப்தி: விபத்தில் பலியானவர் குடும்பத்திடம் ஒப்படைப்பு
மதுரை:
சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுப் பணத்தைக் கொடுக்காததால், கேரளஅரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்ட மதுரை நீதிமன்றம், பணம் கிடைக்கும் வரை அந்த பஸ்சை பத்திரமாகவைத்திருக்குமாறு கூறி மனுதாரடம் ஒப்படைத்தது.
மதுரையைச் சேர்ந்தவர் பொறியாளர் கணேசன். இவர் கேரள அரசு பஸ் மோதி பலியானார். இதைத் தொடர்ந்துஅவரது குடும்பத்தினர் மதுரை நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு செய்தனர்.
இதையடுத்து கணேசன் குடும்பத்தாருக்கு இழப்பீடு தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றஉத்தரவை கேரள அரசு மதிக்கவில்லை. நஷ்டஈடும் தரவில்லை.
இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடினர் கணேசனின் குடும்பத்தினர். மனுவை விசாரித்த நீதிமன்றம், கேரளஅரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஒரு பஸ் ஜப்தி செய்யப்பட்டது பஸ். இந்த பஸ்சை, இழப்பீடு பணம் வரும் வரை பத்திரமாக சொந்தப்பொறுப்பிலேயே வைத்திருக்குமாறு கூறிய நீதிபதி பஸ்ஸை கணேசன் குடும்பத்தினரிடமே ஒப்படைக்கஉத்தரவிட்டார்.
இதையடுத்து பஸ்ஸை கணேசன் குடும்பத்தினர் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.


