தந்தை கைவிட்ட தனயன்!
சென்னை: தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இன்பத் தமிழன், தனது பெயருக்குமுன்பு உள்ள தனது தந்தை தாமரைக்கனியின் இனிஷியலை நீக்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏவாகவும், தமிழகஅரசியலின் பரபரப்புக்குரிய நபராகவும் விளங்கியவரான தாமரைக்கனி.
2001ம் ஆண்டில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டார் தாமரைக்கனி. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிட்டார்.
தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகன் இன்பத் தமிழனை நிறுத்தினார் ஜெயலலிதா. தந்தைக்குத்துணையாக அரசியல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இன்பத்தமிழன் முதல் முறையாகதந்தையை எதிர்த்து சொந்த ஊரிலேயே போட்டியிட்டு எதிர்பாராதவிதமாக வெற்றியும் பெற்றார்.
அன்று முதல் தந்தைக்கும், மகனுக்கும் மோதல் நடக்காத நாளே இல்லை எனலாம். அடிதடிவரைக்கும் அவர்கள் போனதுண்டு. தந்தையிடமிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போன இன்பத்தமிழன் அமைச்சரும் ஆனார்.
தந்தையை எதிர்க்க கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக் காண்டுவருகிறார்.
சில மாதங்களுக்கு முன் தனது இனிஷியலுக்குமுன் இருந்த தந்தையின் இனிஷியலான இரா.தா.என்பதை நீக்கி விட்டு தனது தாயாரின் இனிஷியலை சேர்த்தார் இன்பத் தமிழன்.
இதை இப்போது அதிகாரப்பூர்வமாக்கியுள்ளார் இன்பத் தமிழன்.
இப்போது, இனிஷியல் நீக்கத்தை தமிழக அரசு கெஜட்டிலும் (அரசு ஆணை) தகவல்வெளியிட்டுள்ளது.


