• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அயோத்தி: சிபிஐயால் அத்வானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லோக்சபாவில் அமளி

By Staff
|

டெல்லி:

பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கில் துணைப் பிரதமர் அத்வானியின் மீதான விசாரணையை சிபிஐ கைவிட்டுள்ளதைஎதிர்த்து நாடாளுமன்றத்தில் பெரும் புயல் கிளம்பியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மழை காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவைகூடியதும் அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் எழுந்து சிபிஐயின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிபிஐயை மத்திய அரசு தனது கைப்பாவையாக பயன்படுத்துவதாக எதிர்க் கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.இதை எதிர்த்து பா.ஜ.க. உறுப்பினர்கள் குரல் கொடுக்க, அவையில் பெரும் அமளி துமளி நிலவியது.

இதையடுத்து அவையை சிறிது நேரம் சபாநாயகர் முரளி மனோகர் ஜோஷி ஒத்தி வைத்தார். மீண்டும் அவைகூடியதும் மீண்டும் எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தைக் கிளப்ப, பெரும் களேபரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துஇன்று முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான சதி வழக்கில் அத்வானி, அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 12 பா.ஜ.கவினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. சமீபத்தில் இந்தவழக்கில் இருந்து அத்வானி, ஜோஷி, உமா பாரதி மற்றும் 9 பா.ஜ.கவினரையும் விடுவிப்பதாக சிபிஐ அறிவித்தது.(உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிபிஐ இப்போது அத்வானயின் கட்டுப்பாட்டில் உள்ளது)

இன்று அவை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பின. அவையில் இருந்த பிரதமர் வாஜ்பாயைநோக்கிப் பேசிய எதிர்க் கட்சியினர், சிபிஐயை சுதந்திரமாக செயல்படாமல் மத்திய அரசு தடுக்கிறது. தனக்குவேண்டிய வகையில் சிபிஐயின் செயல்பாட்டை மத்திய அரசு மாற்றுகிறது என்றனர்.

இதற்கு வாஜ்பாய் பதில் ஏதும் தரவில்லை. ஆனால், பிற பா.ஜ.க. எம்.பிக்கள் இதை எதிர்த்துக் குரல் தரவே, பெரும்அமளி ஏற்பட்டது.

இந் நிலையில் எதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையின் மையத்தில் கூடினர். இதையடுத்து சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி இதற்கு விழக்கம் தர முயன்றார்.

ஆனால், அவரை எதிர்க் கட்சி எம்.பிக்கள் பேச அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஜேட்லிக்கும்தொடர்பிருப்பதால் அவரை பேச அனுமதிக்கக் கூடாது என எம்.பிக்கள் கூறினர்.

பெரும் கூச்சல்- குழப்பத்துக்கு இடையே பிரதமரிடம் சென்ற ஜேட்லி, அவரிடம் சில ஆவணங்களைக் காட்டிவிளக்கம் தந்தார். பா.ஜ.க. தலைமைக் கொறடா மல்ஹோத்ராவும் வாஜ்பாயிடம் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே அத்வானி-சிபிஐ விவகாரத்தைப் பேச வசதியாக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் தலைமைக் கொறடா பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்யாதவ், முஸ்லீம் லீக் உறுபர்பினர் பனாத்வாலா, ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர் ரகுவன்ஸ் பிரசாத் ஆகியோர்சபாநாயர் மனோகர் ஜோஷிடம் நோட்டீஸ் தந்தனர்.

ஆனால், அவற்றே சபாநாயகர் நிராகரித்தார்.

பெரும் கூச்சலுக்கு இடையே தாஸ்முன்ஷி பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் விரும்புகிறார் என்பதற்காக அத்வானிமீதான வழக்கை சிபிஐ கைவிடுகிறது. சிபிஐயையும் ஜனநாயகத்தையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறீர்கள்.

மசூதி இடிப்புத் தொடர்பான சதித் திட்டத்தில் அத்வானிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்முகாந்திரம் இருப்பதாக, 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரேபரேலி நீதிமன்றமே, கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே நீதிமன்றத்தில் இப்போது சிபிஐ அத்வானிக்குத் தொடர்பில்லை என்று சொல்லி குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்துள்ளது. இது சிபிஐயின் செயல்பாட்டில் மத்திய அரசு எப்படியெல்லாம் தலையிடுகிறது என்பதற்குஒரு அப்பட்டமான உதாரணம் என்றார் தாஸ்முன்ஷி.

ரகுவன்ஸ் பிரசாத் பேசுகையில், தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் வாஜ்பாய் சிபிஐயின்செயல்பாட்டில் தலையிட்டுள்ளார் என்றார்.

பனாத்வாலா பேசுகையில், சதிக் குற்றச் சாட்டில் இருந்து அத்வானியின் பெயர் நீக்கப்பட்டது இந்தியநீதித்துறையின் செல்பாட்டில் நடந்துள்ள மிகப் பெரிய பிராட். சிபிஐயின் சுந்திரமே பெரும் சிக்கலில்மாட்டியுள்ளது என்றார்.

எதிர்க் கட்சி எம்.பிக்கள் பேசப் பேச பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம்இருந்தன.

பெரும் அமளிக்கு இடையே பேசிய சபாநாயகர், இது ஒரு முக்கியமான விவகாரம். மக்கள் உண்மையைத்தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

அவையில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏதும் பேசவில்லை. பிரதமர் வாஜ்பாயும் எந்தப் பதிலும்தரவில்லை.

கூச்சலும் குழப்பமும் மிகவும் அதிகரிக்கவே அவையை 2 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதன் பின்னர்அவை கூடியபோதும் கூச்சல் தொடரவே இன்று முழுவதும் அவையை ஒத்தி வைக்கப்பட்டது.

கேரள ராஜ்யசபா உறுப்பினர் கொரம்பையில் அகமத் ஹாஜி மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பக்தராம்மன்கர் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராஜ்யசபா இன்று கூடியவுடன் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

இதனால் லோக் சபாவைப் போல ராஜ்யசபாவில் அமளி நடக்கவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X