For Daily Alerts
Just In
கிளிநொச்சியில் புலிகளுடன் நார்வே தூதர் ஆலோசனை
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விடுதலைப் புலிகளுடன் நார்வே சிறப்புத் தூதர்ஜான் வெஸ்ட்போர்க் இன்று ஆலோசனை நடத்தினார்.
இன்று வட- கிழக்குப் பகுதிக்குச் சென்ற அவர் கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.
அதே நேரத்தில் வட கிழக்கில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து புலிகளிடம் இலங்கை அரசு வரைவுத்திட்டத்தையும் நார்வே மூலமாக ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. இத் திட்டம் குறித்தும் புலிகளுடன் ஜான்வெஸ்ட்போர்க் ஆலோசனை நடத்துவார்.
பேச்சுவார்த்தை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதனால் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும்தொடங்கலாம் என்ற நம்பிக்கை பரவியுள்ளது.


