கிரிக்கெட் பேட்டால் அடித்து பெண் கொலை: கொள்ளையர்கள் அட்டகாசம்
சென்னை:
சென்னை புறநகரில் கணவன், மனைவியை, கிக்கெட் பேட்டால் தாக்கிய கொள்ளையர்கள் நகையைத் திருடிச்சென்றனர். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவர் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது.
சென்னை, புறநகரான சிட்லபாக்கத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற கிராம நர்வாக அதிகாரி.இவரது மனைவி வசந்தி.
நேற்று மாலை 4 மணிக்கு சீனிவாசனின் மூத்த மருமகள் இங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் ரத்தக் காயத்துடன்சீனிவாசனும், வசந்தியும் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். வசந்தி ஏற்கனவே இறந்து போயிருந்தார்.
உடனடிாயக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து சீனிவாசனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஅவருக்கு சிகிச்சை தரப்பட்டது. பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரதுஉயிர் ஊசலாடிக் கொணடிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வசந்தியைக் கொன்ற கொள்ளைக் கும்பல் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1,500 பணத்தையும்எடுத்துச் சென்றுள்ளனர். கிக்கெட் பேட்டினால் அடித்து வசந்தி கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அங்கு ரத்தக்கறையுடன் கிடந்த ஒரு கிக்கெட் பேட்டை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


