"குடிமகன்"களுக்கும் ஆடித் தள்ளுபடி!
மதுரை:
ஜவுளிகளுக்கு மட்டும் தான் ஆடித் தள்ளுபடி தர வேண்டுமா?, நாங்கள் தரக் கூடாதா என்று கேட்டுகுடிமகன்களுக்கும் ஆடித் தள்ளுபடி தந்துள்ளன மதுரையில் உள்ள மதுக் கடைகள்.
மதுக் கடைகளில் ஆடித் தள்ளுபடி போர்டுகள் வைக்கப்பட்டு, சீரியல் செட் எல்லாம் போட்டு விற்பனை மிகக்கோலாகலமாக நடந்து வருகிறது.
ஆடி மாதம் பிறந்தாலே, ஜவுளிக் கடைகளில் 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி தரப்பட்டு விற்பனைஅமோகமாக நடக்கும். எங்கு பார்த்தாலும் தள்ளுபடி வியாபாரம் படு பிசியாக நடக்கும்.
அந்த வகையில் தற்போது மதுரை மதுக் கடைகளிலும் ஆடித் தள்ளுபடி விற்பனை "அலப்பறையாக" நடந்துவருகிறது.
பெரியார் பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள சன் ஒயின்ஸ் கடையில் தான் முதலில் ஆடித் தள்ளுபடிஅறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மது வகைக்கும் 60 மில்லிக்கு 4 முதல் 6 ரூபாய் வரை தள்ளுபடி தரப்பட்டுள்ளது.
குடிமகன்களும் இந்த ஆடியில் கொஞ்சம் சந்தோஷமாக "ஆடி" விட்டுப் போகட்டுமே என்ற "நல்லெண்ணத்தில்"இந்த தள்ளுபடியை அறிமுகம் செய்துள்ளார்களாம்.
சன் ஒயின்ஸைப் பின்பற்றி தற்போது அப்பகுதியில் உள்ள மேலும் பல கடைகளிலும் ஆடித் தள்ளுபடி விற்பனைநடந்து வருகிறது. மேலும் மதுரையின் பிற பகுதிகளிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த அமர்க்கள தள்ளுபடி மோகம் மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக பரவி வருகிறது என்கின்றனர் போலீசார்.


