For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளால் ஆபத்து: இந்தியா- இலங்கை இடையே பாலம் கட்ட ஜெ. எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடல் மீது பாலம் கட்டப்பட்டால் விடுதலைப் புலிகள் மூலம் தமிழகத்தில்வன்முறைக் கலாச்சாரம் பரவும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதனால் அத் திட்டத்தைக் கைவிடக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் செயல்படும் இலங்கைமீனவர்களின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவை இந்தியா நிரந்தர குத்தகைக்கு எடுக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்:

புலிகள் மீது பாய்ச்சல்:

இலங்கைக்கும் தமிழகக் கரைக்கும் இடையே பாலம் கட்டும் மத்திய அரசின் திட்டம் தவறானது.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந் நிலையில் இலங்கைக்கும்,ராமேஸ்வரத்திற்கும் தரைப் பாலம் அமைக்கப்பட்டால், விடுதலைப் புலிகள் இந்தப் பாதையை ஆயுதங்கள்கடத்துவதற்கும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவியது. பாலம் கட்டப்பட்டால் அந்த வன்முறைக்கலாச்சாரப் பரவலுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துவிடும்.

துப்பாக்கிக் கலாச்சரத்துடன், தற்கொலைப் படைத் தாக்குதல்களையும் அறிமுகப்படுத்திய அமைப்பு எல்.டி.டி.ஈ.அமைதியான மாநிலமான தமிழகத்தில் வன்முறையை பரப்பியது அந்த அமைப்பு. இப்போது பேச்சுவார்த்தையைநடத்தினாலும் மீண்டும் வன்முறைக்கு அந்த அமைப்புத் திரும்பும் என்பதைத் தான் கடந்த கால வரலாறு நமக்குசுட்டிக் காட்டுகிறது.

தமிழகத்தில் கடந்த காலத்தில் எல்.டி.டி.ஈ. மேற்கொண்ட நடவடிக்கைகளை மறந்துவிடக் கூடாது. இதனால் பாலம்கட்டும் திட்டத்தையே கைவிட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் எந்த நடவடிக்கைகையும்மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது.

எனவே, இந்தப் பாலம் கட்டும் திட்டத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். இந்தியாவின் வர்த்தகத்தை மனதில்கொண்டு திட்டக் கமிஷன் பாலம் கட்டும் யோசனையைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், இதனால் நாட்டின்பாதுகாப்புக்கே பெரும் ஊறு விளையும் என்பது தான் உண்மை.

கச்சத் தீவு வேண்டும்:

தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்று விட்டு பத்திரமாகதிரும்ப முடியாத நிலை உள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் வந்து விட்டதாகக் கூறி, தமிழக மீனவர்களைஅடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று விடுகின்றனர்.

கச்சத் தீவையொட்டிய கடல் பகுதியில்தான் மீன் வளம் நன்றாக உள்ளது. இதனால்தான் அப் பகுதியில் மீன் பிடிக்கதமிழக மீனவர்கள் செல்கிறார்கள். ஆனால், கச்சத் தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதால்தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினராலும், விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் செயல்படும் இலங்கைமீனவர்களாலும் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இதைத் தீர்க்க மத்திய அரசு நிரந்தரத் தீர்வைக் காண முயல வேண்டும்.

கச்சத் தீவை இந்திய அரசு நிரந்தர குத்தகைக்கு எடுத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.வங்கதேசத்துடன் பேசி தீன் பங்காவை குத்தகைக்கு எடுத்தது மாதிரி இதையும் செய்ய வேண்டும். இதன் மூலம்இலங்கையின் இறையாண்மை காக்கப்படுவதோடு, தமிழக மீனவர்களும் பிரச்சினையில்லாமல் கடலில் மீன்பிடிக்க முடியும்.

மேலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் 3 ஆண்டுகள் மீன் பிடித்துக் கொள்ள இந்திய அரசுஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதேபோல, இலங்கை கடல் எல்லையிலும் நமது மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம்செய்ய வேண்டும்.

இரு நாட்டு மீனவர்களும் பிடிக்கப்பட்டால், எந்தவித சித்திரவதைக்கும் ஆளாக்கப்படாமல், உடனடியாகவிடுதலை செய்து விடும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் ஜமீன்தார் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதை இலங்கைக்கு தாரைவார்த்ததில் தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

இதை நீங்களே (வாஜ்பாய்) 1974ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசியபோதுகுறிப்பிட்டுள்ளீர்கள். இதனால் கச்சத் தீவை இந்தியா நிரந்தர குத்தகைக்கு எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X