ஜனனி- நடராஜன் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
மதுரை:
சசிகலாவின் கணவர் நடராஜனுக்குக் நெருக்கமானவராக இருந்த பெண் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதுகுறித்து முழு விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனனி மற்றும் அவரது தாய் ரெஜீனா ஆகியோர் கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களதுமதுரை, சென்னை வீடுகளில் இருந்து ரூ. 1.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது.
ஆனால், இவர்கள் கஞ்சா ஏதும் கடத்தவில்லை என்றும், நடராஜன் தந்த பணத்தைத் தான் வைத்திருந்தனர் என்றும்பலவித தகவல்கள் பரவி வருகின்றன.
நடராஜனுடன் நெருக்கமாக இருந்ததால் தான் இவர்கள் மீது சசிகலா சொல்லி, கஞ்சா வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. மேலும் நடராஜனுக்கு நெருக்கமான முன்னாள்எம்.எல்.ஏ. இந்தப் பெண்களை சிறையில் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
மேலும் நடராஜனின் தம்பி பெயரில் வாங்கப்பட்ட ஹூயூண்டாய் அசென்ட் காரை இவர்கள் பயனபடுத்திவந்துள்ளனர். இப்போது இந்தக் காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார் அதை துணிகளைப் போட்டு பத்திரமாகமூடி வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பிடிபட்ட மற்ற கார்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு துறு பிடித்துக்கொண்டிக்கின்றன.
இதையடுத்து இந்தப் பெண்கள் விவகாரம், அவர்களது அரசியல் தொடர்புகள் ஆகியவை குறித்து முழு விசாரணைநடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ஜோதிராம் கோரிக்கைவிடுத்துள்ளார்.


