For Daily Alerts
Just In
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றுகாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு1,400 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 26.06அடியாக உள்ளது.
இதற்கிடையே, மேட்டூர் அணைப் பகுதியில் அனுமதி பெறாமல் கிணறு வெட்டி மோட்டார் வைத்து நீர் எடுத்துவந்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிணறுகளை மூடியும், மோட்டார் பம்புகளைகைப்பற்றியும் வருகின்றனர்.
இனிமேல் பம்பு வைத்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று 10 ரூபாய் முத்திரைத்தாளில் அப் பகுதிவிவசாயிகளிடம் அதிகாரிகள் எழுதி வாங்கி வருகின்றனர்.


