மதிமுக பிரமுகரின் ஆலை மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நூற்பாலையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஆந்திரமாநில நக்சலைட்டுகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மதிமுக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பி.எஸ்.சுந்தரம். இவருக்குச் சொந்தமான நூற்பாலைபள்ளிப்பாளையம் காந்தி நகரில் உள்ளது. இதில் 20 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஊதிய உயர்வு தொடர்பாகபணியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவரம் ஆந்திர நக்சலைட் அமைப்பான மக்கள் போர்க் குழுவினருக்குத் தெரிய வர, அவர்களில் சிலர்சுந்தரத்தை சந்தித்து ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்கும் சுந்தரம்மறுத்துள்ளார்.
மேலும் நக்சலைட் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த வேலு மற்றும் லோகநாதன் ஆகிய இரு ஊழியர்களையும்சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந் நிலையில் நேற்று அதிகாலை நூற்பாலையில் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆலையின் சுவர்கள் உடைந்துவிழுந்தன.
இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், மக்கள் போர்க்குழு நக்சலைட்டுகள் தான் இதற்குக்காரணமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


