For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தாதா" வீரமணி: ரத்தக் கறை வரலாறு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை :

Veeramaniசென்னை கடலோர மணல் வெளியில் பிறந்து வளர்ந்த ரெளடி வீரமணி அதே மணலில் உயிரை விட்டுள்ளான்.

31 வழக்குகள், இவற்றில் 5 கொலை, 11 கொலை முயற்சி, 15 அடிதடி, ஆள் கடத்தல், கஞ்சா, ஹெராயின் கடத்தல்,மாமூல் வசூலித்தல் வழக்குகள் என பலத்த பின்னணியுடன் இருந்து வந்த அயோத்தி குப்பம் வீரமணி, நேற்றுபகலில் தான் பிறந்து வளர்ந்த அயோத்திக்குப்பம் பகுதியிலேயே கடல் மண்ணிலேயே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சின்ன வயது வீரமணியின் வேலை, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளைக் காவல் காப்பதுதான். பின்னர்மீனவராக மாறினார்.

மீனவர்களுக்கு மத்தியில் பலசாலியாகவும், தைரியசாலியாகவும் இருந்ததால், பிரச்சினைகள் ஏற்பட்டால்வீரமணிதான் அங்கு ஆஜராகி எதிரிகளுடன் மோதி தகராறுகளைத் தீர்த்து வைப்பார்.

இப்படியாக அயோத்தி குப்பம், நொச்சிக்குப்பம், ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி பகுதியில் பிரபலம் ஆனார்வீரமணி.

இந் நிலையில் தனது செல்வாக்கை அதிகரிக்க விரும்பிய வீரமணி, தன்னுடன் சிலரை சேர்த்துக் கொண்டு கும்பலாகஇயங்கத் தொடங்கினார். கட்டப் பஞ்சாயத்து செய்வது, அடிதடியில் ஈடுபடுவது என வீரமணியின் வாழ்க்கை முறைமாறிப் போனது.

கஞ்சா கடத்த ஆரம்பித்தார். ஹெராயின் கடத்தினார். இதனால் கோடிகள் குவிந்தன. இது தவிர பையன்களிடம்சுண்டல் அவித்துக் கொடுத்து கடற்கரையில் விறக வைத்தார். சுமார் 100 சிறுவர்கள் வரை இந்தத் தொழில்பார்த்தனர். இதிலும் நல்ல வருமானம்.

இது தவிர கடலோரத்தில் சாராயம் விற்றார். படகு ஓரத்தில் ஒதுங்கும் இளம்ஜோடிகளை இவரது கும்பல் வாட்டிஎடுப்பது வழக்கம்.

வீரமணியின் செயல்பாடுகள் போலீஸாரின் கவனத்தை ஈர்க்கவே அவர் மீது கண் வைக்கத் தொடங்கினர்.

1984ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கினார் வீரமணி. இதில் இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால், உச்ச நீதிமன்றம் வரை போய் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்துக் கொண்டு சிறைவாசம்அனுபவித்தார் வீரமணி.

பின்னர் 1989ல் விடுதலையாகி வெளியே வந்தபோது, வீரமணியின் செல்வாக்கு அதிகரித்தது.

தனக்கு எதிராக கஞ்சா கடத்தும் செயல்களில் ஈடுபட்டிருந்த திருநாவுக்கரசு என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்ததுரைராஜ் என்பவரை போட்டுத் தள்ளினார் வீரமணி.

Veeramani Body

வீரமணியின் உடல்
இதற்குப் பழி வாங்கும் விதமாக வீரமணியின் தம்பி வீரகுமாரை, திருநாவுக்கரசு தரப்பு கடந்த 1991ம் ஆண்டுகொன்று தீர்த்தது. இப்படியாகத்தானே, வீரமணியின் அட்டகாசம், திருவல்லிக்கேணி, ஐஹ்ஸவுஸ் என தென்சென்னைப் பகுதியில் தலைவிரித்தாடி வந்தது.

வீரமணியின் கொட்டத்தை அடக்கும் வகையில் 1993ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர்நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

வந்ததும் சும்மா இருக்காமல் தோட்டம் சேகர் என்பவரைக் கொல்ல முரளி என்பவருக்கு உதவினார். முரளியும்,தோட்டம் சேகரைக் கொன்றார்.

இந் நிலையில் எழும்பூர் நீதிமன்றத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது, பழைய எதிரி திருநாவுக்கரசுவின்கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை வெட்டித் தள்ளினர். இதில் அந்த நபர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த சமயத்தில் வீரமணியின் குற்றவியல் வாழ்க்கையின் உச்சகட்டமாக, கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதிசென்னை கடற்கரையில் நடந்த திமுக பேரணியின்போது, வீரமணியின் ஆட்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.

கையில் பெரிய பெரிய அரிவாள்கள், கத்தியுடன் திமுகவினரை ஓட ஓட விரட்டி வெட்டித்தள்ளினர். மொத்தமாக 9 பேர் உயிரிழக்கக் காரணமாக வீரமணியின் வெறியாட்டம் அமைந்தது.

வீரமணியின் அட்டகாசம் தொடரவே மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், மறுபடியும்வெளியே வந்தார். போலீஸார், வீரமணி வழக்குகளை சரியான முறையில் அணுகுவதில்லை என்று புகார்கூறப்பட்டு வந்தது.

வீரமணியின் சாவு மூலம் சென்னையை அச்சுறுத்தி வந்த பயங்கர ரவுடியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதுநிச்சயம் சென்னை மக்களுக்கு பெரும் நிம்மதியாகவும், ரவுடிகள், தாதாக்களுக்கு நல்ல பாடமாகவும் இருக்கும்என்பதில் சந்தேகமில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X