For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உடல் தகனம்: கடற்கரையில் போலீஸ் குவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Veeramaniவீரமணி மீது வெறும் 5 கொலை வழக்குகள் தான் பதிவாகியுள்ளன. ஆனால், இவனால் கொல்லப்பட்டவர்களின்எண்ணிக்கை கணக்கிலேயே அடங்காகது என்கின்றனர் உளவுப் பிரிவு போலீசார்.

1982ம் ஆண்டிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இவனது வீச்சரிவாளுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கைஎப்படியும் நூறைத் தாண்டுமாம்.

சத்தமே இல்லாமல் ஏகப்பட்டவர்களை கடலில் மூழ்கடித்துக் கொன்று, பிணம் வெளியே வந்துவிடாமல் கல்லைக்கட்டி கடலில் ஏறிவார்களாம் இவனது கும்பலலைச் சேர்ந்தவர்கள்.

கழுத்தில் 50 சவரனில் 4 தங்க சங்கிலிகள், பல வகையான மீன்களின் டாலர்கள், தங்க காப்பு, காதில் தங்கவளையம், வைர மோதிரங்கள், கார்கள் என படாடேபமான ஆசாமி வீரமணி.

Sub Inspector Kingsly

என்கெளவுன்டரில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கிங்ஸிலி
சமீபத்தில் வெளியே வந்த இவன் மீண்டும் கொலைத் திட்டங்களில் இறங்கியதால் அதிர்ந்து போன போலீசார்எப்படியாவது இவனை மீண்டும் உள்ளே தள்ள திட்டமிட்டனர். பழைய வழக்குகள் எல்லாம் விசாரணையில்இருப்பதாலும், அதில் இவன் ஜாமீனில் இருப்பதாலும் அதில் இவனை சிக்க வைக்க முடியாது என்பதால் புதியவழக்குகளைப் போடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சமீபத்தில் நடந்த உயர் மட்ட ஆலோசனையில் கடலோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்களிடம்இவனுக்கு எதிராக புகார் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அண்ணா சதுக்கம் அருகே சங்குககள் விற்கும் கடை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர் சிறுகடைவியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த தாஸ், டீக் கடை வைத்துள்ள ராஜா, கடல் பொருள்கள் விற்கும் கடை வைத்துள்ளமுருகன், கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் வெங்கடேசன், கலா, ராஜா, பஜ்ஜி கடை வைத்துள்ள அஞ்சலை,கூல்டிரிங்ஸ் கடை வைத்திருக்கும் மதுரை ஆகியோரிடம் புகார்கள் பெறப்பட்டன.

அந்தப் புகாரில், தாங்கள் சுமார் 15 வருடங்களாக சென்னை மெரீனா பீச் எம்.ஜி.ஆர் சமாதி பின்புறத்தில் சுமார்300 சிறு கடைகள் வைத்து நடத்தி வருவதாகவும் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணியிலிருந்து 9மணி வரை ஒரு கடைக்கு மாமூல் ரூ.20 முதல் 30 வரை வீரமணி ஆட்கள் சுமார் 10 பேர் வந்து மிரட்டி பயமுறுத்திகேட்பதாகவும்,

பணம் கொடுக்கவில்லை என்றால் கடைகளை அடித்து உடைப்பதாகவும், புதிதாக கடை போட்டாலோ அல்லதுகடையை மாற்றினாலோ அல்லது விற்றாலோ ரவுடி வீரமணிக்கு ரூ.3,000 மாமூல் கொடுத்தாக வேண்டும் என்றுஇதனால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

Veeramanis relatives scolding police officials

போலீஸாரை அர்ச்சிக்கும் மீனவப் பெண்கள்
இந்த புகார் மனுவை வைத்தே வீரமணியைப் பிடிக்க திட்டம் தீட்டப்பட்டது. இதையடுத்துத் தான் மெரீனா பீச்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைதுரை மற்றும் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் சாதாரண உடையில்காரில் போய் அயோத்திக் குப்பத்தில் இறங்கினர்.

தூரத்தில் துப்பாக்கிகளுடன் மப்டியில் வேறு சில கார்களில் போலீசார் தயாராகக் காத்திருந்தனர்.

எப்படியும் வீரமணி கும்பல் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்ததனர் போலீசார்.

வீரமணியை நெருங்கிய போலீசார் விசாரணைக்காக மெரீனா காவல் நிலையம் வருமாறு அவரிடம் பேசஆரம்பித்தவுடனேயே வீரமணி தரப்பில் தாக்குதல் தொடங்கியது. அந்தக் கும்பல் பட்டாக் கத்திகளை வீசசுதாரித்துக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கிகளை உருவிக் கொண்டு சுட ஆரம்பிக்க, இதை எதிர்பாராதஅக் கும்பல் சிதறியோடிது.

வீரமணி மட்டும் திமிரிக் கொண்டு தாக்க வர, குண்டுகளை அவன் மீது பொழிந்தனர் அதிகாரிகள். இதையடுத்துஅப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களை தாக்க ஓடி வரவே, அவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் மேலும் ஒரு ரவுண்ட் சுட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் விலகியோட, இதற்குள் அந்த இடத்துக்கு வந்துவிட்ட பேக்-அப் டீம் போலீசார்குண்டடிப்பட்ட வீரமணியை அள்ளிப் போட்டுக் கொண்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது.

பட்டாக் கத்திகளால் தாக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் தற்போது அரசு ராயப்பேட்டைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட வீரமணிக்கு பல பெண்களுடன் தொடர்புண்டு. ஆனால், அதிகாரப்பூர்வமாக சரோஜா, உதயா எனஇரு மனைவிகள்.

Police Protection

அயோத்திகுப்பம் பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸ் படை
இவன் உடல் வைக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையிலும், பின்னர் உடல் கொண்டு செல்லப்பட்டராயப்பேட்டை மருத்துவமனைக்கும் ஏராளமான மீன் வண்டிகளில் நூற்றுக்கணக்கான மீனவப் பெண்கள்கூடிவிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை மெட்ராஸ் பாஷையில் நா கூச வைக்கும்வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர்.

தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இவர்கள் ஓலமிட்டவாறு அலற மருத்துவமனை வட்டாரமே பயத்தில்மூழ்கியது.

அதிக அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்ட பின்னரே இந்தப் பெண்கள் அமைதியாயினர். துணை கமிஷனர்முருகன் தலைமையிலான படை எந்த ஆக்ஷனுக்கும் தயாராகவே இருந்தது. ஆனால், போலீசாருடன் வீணாகமோதுவதை அக் கும்பல் தவிர்த்துவிட்டது.

வீரமணியின் பிணத்தை நேற்றே பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முதலில்திட்டமிட்டனர். ஆனால், ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டி இருந்ததாலும், பிண பரிசோதனை செய்யவேண்டிய ராயப்பேட்டை மருத்துவமனை டாக்டர் விடுமுறையில் சென்றிருந்ததாலும் நேற்று பிண பரிசோதனைநடக்கவில்லை.

இன்று பிண பரிசோதனை நடத்தப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து வீரமணியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. இதையடுத்து அயோத்திகுப்பம்,மெரீனா கடற்கரை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் தாங்கியபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

8 கூட்டாளிகளுக்கு வலைவீச்சு:

இதற்கிடையே, ரவுடி வீரமணியின் தம்பிகள் செல்வமணி, கலைமணி உள்ளிட்ட வீரமணியின் கூட்டாளிகள் 8பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடற்கரைப் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததாக அவர்கள் மீதும் புகார்கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீரமணியின்உடல் தகனம் முடிந்தவுடன் 8 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X