For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் "என்கெளன்டர்" சாவுகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட தாதா வீரமணியுடன் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரை 3 பேரைபோலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சென்னையின் மிகப் பயங்கரமான ரவுடிகளில் ஒருவரான அயோத்தி குப்பம் வீரமணி நேற்று சென்னை கடற்கரைப்பகுதியில் போலீஸாருடன் மோதலில் ஈடுபட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னை நகரில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ரவுடிகள், கைதிகளை போலீஸார் சுட்டுக் கொள்வதுஅதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2001ம் ஆண்டு 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டுஇதுவரை 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் ராஜாராமன்மற்றும் அவனது கூட்டாளியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

தப்பித்து ஓட முயன்றபோது அவர்களை சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி மும்பை தாதா சோட்டா ராஜனின் கூட்டாளியான சஞ்சய் காட்டே,ஈக்காட்டுத்தாங்கலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசைத்தம்பி, மனோ ஆகிய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. போலீஸார் திட்டமிட்டே ஆசைத் தம்பியைக் கொன்றுவிட்டதாக கூறப்பட்டது.

1999ம் ஆண்டு கபிலன் என்ற ரவுடி கொல்லப்பட்டார். இவர் சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இப்படி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள், கைதிகளின் எண்ணிக்கை நீளமாகவே உள்ளது.

ஒவ்வொரு முறையும் சுட்டுக் கொல்லப்படும்போது, அதுகுறித்து சர்ச்சைகள் எழுவது சகஜமாகி விட்டது. ஆனால்,அப்போதெல்லாம், தங்களை தாக்க வந்தபோது தற்காப்புக்காக சுட்டதாக போலீஸார் கூறுவதும் வழக்கமாகிவிட்டது.

திருந்தி வாழ ஆசைப்பட்டனா?

கொல்லப்பட்ட வீரமணி திருந்தி வாழ ஆசைப்பட்டதாகவும், இது குறித்து சென்னையில் உள்ள சமூக நலஅமைப்பான எக்ஸ்னோரா இன்டர் நேஷனல் நிறுவனர் எம்.பி. நிர்மலுக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிகிறது.

இத் தகவலை நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய நிர்மமே தெரிவித்தார். ஆனால், அவர் பேசி முடித்த சிலநிமிஷங்களில் வீரமணி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வந்து சேர்ந்தது.

பல கோடி சொத்து:

Veeramani with second wife udhaya

இரண்டாவது மனைவி உதயாவுடன் வீரமணி
வீரமணியின் முதல் மனைவி சரோஜா, இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவிபெயர் உதயா. உதயாவுக்கு ஏற்கனவே திருமணமானவர்,

கணவர் இறந்ததும் மகளோடு வீரமணியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

வீரமணியோடு உதயாவும் கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து வந்தார்.

வீரமணிக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கடலோரங்களில் 25 பங்களாக்கள்வரை உள்ளன. மீன் பிடிக்கும் விசைப் படகுகள் சுமார் 15 உள்ளன. இவற்றின் மதிப்பே பல கோடிகளைத்தாண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X