For Daily Alerts
Just In
காவிரி கண்காணிப்பு குழு 7ம் தேதி கூடுகிறது
டெல்லி:
வறட்சிக் காலத்தில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பான திட்டம் வகுக்க, முக்கிய ஆலோசனைநடத்துவதற்காக, காவிரி கண்காணிப்பு குழு வரும் 7ம் தேதி டெல்லியில் கூடுபகிறது.
இக்கூட்டத்துக்கு மத்திய நீர் வளத்துறை செயலாளர் கோஸ்வாமி தலைமை வகிப்பார். இதில் தமிழகம், கர்நாடக,கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் பாசன, பொதுப் பணித்துறைச்செயலாளர்கள் பங்கேற்பார்கள்.
இவர்களுடன் மத்திய நீர் வள கமிஷன் தலைவர் மற்றும் நீர் வளத்துறை உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில்பங்கேற்கின்றனர்.


