For Daily Alerts
Just In
மும்பை பஸ் குண்டு வெடிப்புக்கு தாவூத் இப்ராகிமே காரணம்: மத்திய அமைச்சர்
காஞ்சிபுரம்:
மும்பையில் சமீபத்தில் நடந்த பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தாவூத் இப்ராகிம்தான் காரணம் என்று மத்தியஉள்துறை இணை அமைச்சர் ஐ.டி.சாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்திற்கு வந்த அவர் அங்கு சங்கராச்சாரியார்களை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில், மும்பை பஸ்சில் குண்டு வெடித்ததன்பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தாவூத் இப்ராகிக்கு இதில் தொடர்பு இருக்கிறது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் ஒளிந்திருந்தாலும்அவனது ஆட்கள் மும்பையில் அதிக அளவில் உள்ளனர்.
இதுவும் எல்லை கடந்த பயங்கரவாத செயல்தான். இதை தடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்அவர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஐ.டி. சாமி, சங்கராச்சாரியாரைச்சந்தித்தார்.


