For Daily Alerts
Just In
ஆடிப் பெருக்கு விழாவில் சோகம்: காவிரியில் மூழ்கி 2 பேர் சாவு
கரூர்:
ஆடிப் பெருக்கு விழாவை யொட்டி காவிரி ஆற்றில் குளித்த 2 பேர் சேறு நிறைந்த காவிரியில் சிக்கி உயிழந்தனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. வாங்கல் என்ற இடத்தில்,காவிரி ஆற்றில் ஏராளமான பேர் புனித நீராடினர்.
அப்போது வெங்கமேடு என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சேறு நிறைந்த பகுதியில் குளித்தபோது அதில்சிக்கி மூழ்கி இறந்தார்.
இதேபோல, மாயனூர் என்ற இடத்தில் மணிகண்டன் என்பவரும் நீரில் மூழ்கி இறந்தார். இவரும் வெங்கமேடுபகுதியைச் சேர்ந்தவர்தான்.


