For Quick Alerts
For Daily Alerts
Just In
மேட்டூர் அணை திறப்பு .. மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் கடும் குடிநீர்ப் பிரச்சினை நிலவுவதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்திறந்து விடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் ஆடிப் பெருக்கு விழாவும் நெருங்கியதால் கடந்த 29ம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர்வெளியேறிக் கொண்டுள்ளது. விநாடிக்கு 3000 கன அடி நீர் தற்போது வெளியாகிக் கொண்டுள்ளது.
5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. தற்போத அதை மேலும் 3நாட்களுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


