For Daily Alerts
Just In
வாரண்ட் இல்லாமல் கோபாலை கோர்ட்டுக்குக் கொண்டு சென்ற இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
சென்னை:
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதின்றத்தின் வாரண்ட் இல்லாமல் நக்கீரன் கோபாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தியஇரண்டு இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்உத்தரவிட்டுள்ளார்..
கடந்த வாரம் கோபால் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தின்வாரண்ட் இல்லாமல் அவரைக் கொண்டு வந்த காவல்துறையினர் மீது நீதிபதி ஜெயபால் கடும் கண்டனம்தெரிவித்தார்.
வாரண்ட் இல்லாமல் சிறையிலிருந்து கோபாலை வெளியே அனுப்பிய சிறைத்துறை அதிகாரிகளையும் நீதிபதிகடுமையாக கண்டித்தார்.
இந்த நிலையில் கோபாலை வாரண்ட் இல்லாமல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர்கள் இக்பால் மற்றும்முருகதாஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார்இன்று உத்தரவிட்டார்.


