அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் .. உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருணாநிதி
சென்னை:
6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தவிர மற்ற அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றுஉச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அத்தனை பேரையும் சகட்டு மேனிக்கு டிஸ்மிஸ் செய்தஅரசின் நடவடிக்கையை திருத்தியமைத்து 6072 பேரைத் தவிர அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
அதிலும், 2749 அதிகாரிகள் மீதான டிஸ்மிஸ் உத்தரவை சஸ்பெண்ட் உத்தரவாக மாற்றுமாறு உச்சநீதிமன்றம்கூறியுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
3 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தில் இவர்களின் வழக்குகள் விசாரணைநடத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற செய்தி சந்தோஷம்தருவதாகவே உள்ளது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அவ்வப்போது பேசித் தீர்த்து சுமூக முடிவு காண அரசு முயல வேண்டும்என்றார் அவர்.


