இன்றும் பணியில் சேர்க்கப்படாத 8,063 அரசு ஊழியர்கள்
சென்னை:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு, இன்றும் கூட டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் யாரும் பணியில்சேர்க்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால், 6,072 அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களைத் தவிர மற்ற 8,063 பேரையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகதெரிவித்தார்.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வந்தனர்.
ஆனால் அவர்கள் யாரையும் பணியில் சேர்க்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். நாளை வந்து பார்க்குமாறுஅதிகாரிகள் கூறி விட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் நேற்று மாலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
ஊழியர்களை மீண்டும் சேர்க்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டவில்லை. தற்போது வாய் மூலமாகவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துப் பூர்வமான உத்தரவு எங்களது கைக்குகக் கிடைத்த பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் முக்கிய துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வேலையில் சேர்க்கும்நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார்.
அதே நேரத்தில் மீதமுள்ள 6,072 பேருக்கு வேலை தரப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீதானவழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் குழு விசாரணைக்குப் பின்னரே இவர்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இன்று மாலை 4 மணிக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடிஆலோசனை நடத்துகிறார்கள்.


