For Daily Alerts
Just In
போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
திருச்சி:
திருச்சியில் பணியில் இருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த போலீஸாகாரர் தன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
தர்மபுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் திருச்சி ஆயுதப்படை காவல் படையில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை தன்னிடமிருந்த துப்பாக்கியால் தொண்டையில் சுட்டுக் கொண்டார். இதையடுத்து சம்பவஇடத்திலேயே அவர் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த நந்தகுமாரின் தந்தை சமீபத்தில் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
இதனால் நந்தகுமார் சோகமாக இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாராஅல்லது வேறு விவகாரம் காரணமா என்று தெரியவில்லை.


