8063 பேருக்கு இன்று முதல் மீண்டும் வேலை
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 8063 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் மீண்டும் பணியில்சேர்க்கப்படுகிறார்கள். மீதமுள்ள 6072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்கு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றமூன்று நீதிபதிகளின் பெயர்களும் இன்று அறிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 8063 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு இவர்கள் பணியில்அமர்த்தப்படுவார்கள். ஜூலை 25ம் தேதி முதல் இவர்கள் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவர்.
கைது செய்யப்படாதவர்கள், தலைமைச் செயலகம் அல்லாத ஊழியர்கள், எஸ்மா சட்டம் 4-வது பிரிவின் கீழ்மட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே பணியில் சேர்க்கப்படவுள்ளனர்.
மீதள்ள 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கு குறித்து விசாரிக்க 3 ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றநீதிபதிகள் மூலம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்த நீதிபதிகள் யார் என்ற விவரத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஇன்று அறிவிப்பார் என்று தெரிகிறது.


