For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அலுவலங்களில் இயல்பு நிலை திரும்புகிறது: கோட்டையில் சோகம் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபடி 8,063 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலைமுதல் முழு வீச்சில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதனால் மாநில அரசு அலுவலகங்களில் மகிழ்ச்சிகரைபுரண்டு ஓடியது.

ஆனால், தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 2,209 ஊழியர்களுக்கும் இன்று முறைப்படி சஸ்பெண்ட் உத்தரவுகள்வழங்கப்பட்டன. இதனால் கோட்டையில் மட்டும் சோகமான சூழல் காணப்பட்டது.

இன்று காலை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மன்னிப்புக் கடிதம் பெறப்பட்ட பின்னர் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு அலுவலகங்களில் இயல்பு நிலை திரும்பஆரம்பித்துள்ளது.

இருப்பினும், தலைமைச் செயலகத்தில் மட்டும் இன்னும் பழைய நிலையே நீடிக்கிறது. அங்கு 554 ஊழியர்கள்டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 2,209 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று சஸ்பெண்ட்உத்தரவுகள் வழங்கப்பட்டன.

சென்னை தலைமை செயலகத்தில் 4,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வேலை நிறுத்தத்தில்கலந்துகொண்டதற்காக இதில் 3,112 பேரை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்ததீர்ப்பை அடுத்து 3,112 பேரில் 2,209 பேருடைய டிஸ்மிஸ் உத்தரவு சஸ்பெண்டு உத்தரவாக மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 554 பேர் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. மொத்தம் 2,769 பேருடைய சஸ்பெண்டு பட்டியல் கோட்டையில் அந்தந்த துறைஅலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் இன்று நேரில் வந்து சஸ்பெண்ட் உத்தரவுகளை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், தலைமைச் செயலகஊழியர்கள் மட்டும் மீண்டும் பணியில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளது பெரும் வேதனையைத் தந்துள்ளது.அவர்களை மன்னித்து அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு அருள் கூர்ந்து மீண்டும் பணியில் சேரஅரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, இந்த 2,769 பேர் உள்ளிட்ட மொத்தம் 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களின் வழக்குகுறித்து விசாரிப்பதற்காக 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் யார் என்பது இன்று இரவு தெரிய வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 10 நீதிபதிகள் பெயர் அடங்கிய பட்டியல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்குஅனுப்பப்பட்டுள்ளது. அவர்களிலிருந்து 3 பேரை தேர்வு செய்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவிப்பார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X