For Daily Alerts
Just In
அவதூறு வழக்குகள்: சென்னை நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்
சென்னை:
நக்கீரனில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொடர்பாக போடப்பட்டுள்ள 3 அவதூறு வழக்குகளில் ஆஜராக, அந்தப்பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் இன்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
பொடா சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் மீது நக்கீரன் இதழில் எழுதப்பட்ட 3கட்டுரைகள் தொடர்பாக, தமிழக அரசு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகள் விசாரணைக்காக இன்று நீதிபதி ஜெயபால் முன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து கோபால்மீண்டும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.


