நான் கடன்காரன்- பெரியசாமி; வயித்தெரிச்சல் சும்மா விடாது - தாமரைக்கனி
ஈரோடு:
நான் அமைச்சர் பதவியில் இருந்திருந்தாலும் கூட, கடன்காரனாகவே இருக்கிறேன் என முன்னாள் திமுக அமைச்சர்என்.கே.கே.பெரியசாமி கூறினார்.
தனது வீட்டில் நடந்த ரெய்ட் குறித்து அவர் கூறியதாவது:
இந்தச் சோதனை ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது எந்தஆவணமும் கைப்பற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இப்படிபட்ட செயல்கள் எல்லாம் சர்வசாதாரனம்.
நேற்று நடந்த சோதனையின் போது வீட்டில் ரூ.12,000 இருந்தது. அதில் ரூ.9,000 எனக்கு சொந்தமானது.மீதமுள்ள ரூ.3,000 கட்சிக்காக திரட்டிய தேர்தல் நிதி. மேலும் 22பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிசாமான்கள்தான் வீட்டில் இருந்தன. அவற்றை போலீஸார் பார்த்தனர்.
எனது வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட்டை எடுத்துச் சென்றுள்ளனர். நான் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளேன்என்று கூறினேன். இதையடுத்து விரைவில் பாஸ்போர்ட்டை திருப்பித் தருவதாக சொன்னார்கள்.
இச் சோதனை முழுக்க, முழுக்க பழிவாங்கும் செயல்தான். இதில் போலீஸ்காரர்களை குற்றம் சொல்ல முடியாது.அவர்கள் தங்கள் பணியைத்தான் செய்கின்றனர். நான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் எப்படிஇருந்தேனோ அப்படியே தான் இருக்கிறேன். தற்போதும் நான் கடன்காரனாகவே உள்ளேன் என்றார்பெரியசாமி.
தனது வீட்டில் நடந்த சோதனைகள் குறித்து முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி கூறுகையில்,
எனது வீட்டில் எந்த ஆவணத்தையும் போலீஸார் கைப்பற்றவில்லை. பொய் வழக்கு போடுவதற்காக அதிமுக அரசுபழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதை சட்டபூர்வமாக சந்திக்க நான் தயார் என்றார்.
திமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவர் வீட்டின் வெளியிலுள்ளஎம்.ஜி.ஆர். சிலை அருகே உட்கார்ந்து கொண்டு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சோதனைகள் குறித்து நிருபர்களிடம் றுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வேண்டாதவர்கள் மீது கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கு போடுவார். என்வீடு திறந்த வாசலை கொண்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் மட்டுமல்ல, திருடர்கள் கூட எளிதில் எப்போதும்வரலாம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்.
எந்த நேரமும் சோதனை போடலாம். என்னை அவமானப்படுத்தி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைப்பதற்கானசதிதான் இது. நான் எம்.ஜி.ஆர்.சிலை முன் இருந்து கூறுகிறேன். என் வயிற்றெரிச்சல் இந்த ஆட்சியை ஒழிக்கும்.சோதனையின் போது என் வீட்டில் ரூ.8,200 இருந்தது. அதனை எடுத்துப்பார்த்து விட்டு போலீஸார் திரும்பிகொடுத்துவிட்டனர்.
என் மனைவி அணிந்திருந்த நகைகள், வீட்டில் வைத்திருந்த நகைகள் எல்லாவற்றையும் நகை மதிப்பீட்டாளரைவைத்து மதிப்பீடு செய்தனர்.
அருகில் உள்ள என் புதுவீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு என் மகன் இன்பத்தமிழன் திருமணத்திற்கு வந்தவெள்ளி பாத்திரங்கள், சீர்வரிசை சாமான்கள் இருந்தன.
என் பழைய துணிகளையும் கூட விடலப்பா, அதுக்கு ஒரு வலையைப் போட்டு மதிப்பீடு செய்தார்கள்.
இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் ஒரு முழு அரசியல்வாதி. என் வாழ்க்கையை கோர்ட்டும், போலீஸ்நிலையமுமாக பொழுது போக்கி கொண்டிருப்பவன் நான். இதெல்லாம் எனக்கு பிசாத்து என்றார்.
இச் சோதனைகள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், அதிமுக ஆட்சியில் கொலை கொள்ளைநடப்பதை போலீஸார் விட்டுவிடுவார்கள். திமுகவிர் வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதேஅவர்களுக்கு வேலை. மதுரையில் ஜனனி வீட்டில் கஞ்சாவை வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர். ஆனால்,இங்கு கஞ்சா எதுவும் வைக்கவில்லை இந்த போலீசார். அதுவரை நல்லது என்றார்.


